வாட்டர் பாட்டில் உள்பகுதியைச் சுத்தமாகக் கழுவுவது எப்படி?

உங்கள் தண்ணீர் பாட்டிலின் உள்ளே வழுவழுவென இருக்கிறதா?

கருப்பு, பழுப்புப் புள்ளிகள் ஏற்பட்டிருக்கின்றனவா?

சோப்புத் தூள் வேண்டாம், பிரஷ் வேண்டாம், ரொம்ப சிம்பிள்!

ஒரு ஸ்பூன் அரிசி, ஒரு ஸ்பூன் கல் உப்பை பாட்டிலுக்குள் இடுங்கள்.

அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாற்றை விடுங்கள், தோலையும் உள்ளேயே போட்டுவிடுங்கள்.

ஒரு சின்ன டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றுங்கள்.

பாட்டிலை மூடி, நன்றாகக் குலுக்கி ஒரு மணி நேரம் வைத்திருங்கள்.

பிறகு பாட்டிலை எடுத்து மீண்டும் சிறிது நேரம் குலுக்கிவிட்டு நீரால் அலசி விடுங்கள்.

இப்போது உள்ளே பாருங்கள், நம்பவே முடியாது, நம்ம பாட்டில்தானா?

ஏனெனில் அழுக்கே கிடையாது, பளிச்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...