கோடை வெய்யில்... என்ன சாப்பிட வேண்டும்?

அக்னி நட்சத்திரம் முடிந்தும் கோடை வெய்யில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் கோடை வெய்யிலைச் சமாளிக்க உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

உடலில் நீர்ச்சத்து இழப்பு அதிகம் ஏற்படுவதால் வழக்கத்தைவிட கண்டிப்பாக அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலுக்கு நீரேற்றத்தை வழங்கும்.

பிஞ்சுப் புடலங்காய், பூசணி, சௌசௌ, பரங்கிக்காய் என்று நார்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டாக சமைத்துச் சாப்பிட வேண்டும்.

காரக்குழம்பு, புளிக்குழம்புகளைத் தவிர்த்து பருப்பு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உஷ்ணக் கட்டியிலிருந்து காப்பாற்றும்.

தர்பூசணி, கிர்ணிப்பழங்களை தினமும் சிறிதளவு சாப்பிடலாம். முடிந்தவரை தினமும் இளநீரும் பருகலாம்.

எலுமிச்சம், ஆரஞ்சு, தக்காளி, திராட்சை போன்ற பழ வகைகளை சாப்பிடலாம். இதனை பழச்சாறாகவும் சாப்பிடும்பொழுது வெயிலுக்குக் குளுமையாக இருக்கும்.

சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றைத் தவிர்த்து இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பம் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...