குழந்தைகளுக்கு... வசம்பின் பயன்கள் தெரியுமா?

சிறந்த மூலிகை மருந்தான வசம்புவின் நன்மைகள் ஏராளம். வசம்புக்கு 'பிள்ளை வளர்த்தி' என்ற பெயருண்டு.

இது குறிப்பாக குழந்தைகளின் நரம்புகள் பலம் பெற்று, மூளை சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. அதனாலே பிறந்த குழந்தைகளின் கைகளில் வசம்பு கட்டப்படுவது வழக்கம்.

உணவாலோ அல்லது அலர்ஜியாலோ விஷத்தன்மை ஏற்படக்கூடாது என்பதற்காக பிறந்த குழந்தைக்கு வசம்பை உரசி வாயில் வைப்பர்.

வசம்பைத் தூள் செய்து, அதில் 2 தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து அருந்தினால், தொற்றுநோய்கள் நீங்கிவிடும். எப்படிப்பட்ட விஷத்தன்மையும் நீங்கிவிடும்.

அரை தேக்கரண்டி வசம்புப் பொடியுடன் சிறிது கடுக்காய்ப் பொடி, மிளகுப் பொடி, திப்பிலி, பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

அதில் தண்ணீர் ஊற்றில் கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்தால் நெஞ்சகக் கோளாறு, சளி, இருமல், செரிமானம் நீங்கி சரியாகும்.

வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளுக்கும் வசம்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

வயிற்று உப்புசத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள காற்றை வெளியே தள்ளும். வயிற்று வலி, அல்சரைப் போக்கும் தன்மை கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...