காலையில் எழுந்தவுடன் இதைச் செய்யுங்கள்!

காலையில் எழுந்தவுடன் உடல் ஆரோக்கியத்திற்காக சில பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளியை உங்கள் உடல் பெற வேண்டும். காலை 10 மணிக்கு முன்னதாக 30 நிமிடங்கள் சூரிய ஒளி பெறுவது தூக்கத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இரவில் தூக்கத்திற்கு முன்பும் சரி, காலையில் எழுந்தவுடனும் சரி பெரும்பாலும் அனைவரின் கையிலும் போன் இருக்கும். இது தவறு என்றும் காலை எழுந்ததும், இரவு தூக்கத்திற்கு முன்பும் குறைந்தது 45 நிமிடங்களுக்கு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் நடப்பது, ஓடுவது என லேசான உடற்பயிற்சிகளைச் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் மோசமானது என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், காலை உணவை சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

சமச்சீரான உணவு வேண்டும். நள்ளிரவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

இரவில் தாமதமாகத் தூங்கினாலும் காலையில் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...