சீரகத்தை பாலில் அரைத்துத் தொடர்ந்து தடவி வர முகப் பருக்கள் தொல்லை இருக்காது.
கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சரும நிறம் அதிகரிக்கும். கண்களில் கருவளையங்களைப் போக்கலாம். முகத்தில் எண்ணெய் வழிவதும் தடுக்கப்படும்.
மஞ்சள் தூள், கடலை மாவு கலவை சருமத்தில் தடவி குளித்தால், பொலிவைத் தருவதோடு, நிறத்தையும் அதிகரிக்கும்.
பாலுடன் கடலை மாவைச் சேர்த்து, சற்று கெட்டியான பேஸ்ட் செய்து, சிறிது தேனை சேர்த்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
பாதாமை இரவில் படுக்கும் முன் ஊற வைத்து, பின் காலையில் அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து, எலுமிச்சை சாற்றை விட்டு, சிறிது கடலை மாவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிட முகம் பளிச்சென்று இருக்கும்.
முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அத்துடன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி, முகம் அழகாக இருக்கும்.
முழங்கை, கழுத்துகளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு, கடலை மாவில், தயிர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி வர படிப்படியாக கருமை நீங்கும்.