பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தன்னுடைய சருமப் பராமரிப்பு குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சருமப் பராமரிப்புக்கு 2 பொருள்களை மட்டும் பயன்படுத்துவதாகக் கூறும் கத்ரீனா, சருமத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவுவதை வழக்கமாக வைத்துள்ளாராம்.
அடுத்ததாக சரும பொலிவுக்கு ஓட்ஸைப் பயன்படுத்துகிறார். ஓட்ஸை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலக்க வேண்டும், விருப்பப்பட்டால் ஆப்பிள் சீடர் வினிகர், ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த கலவையை 20 முதல் 25 நிமிடங்கள் முகத்தில் தடவி பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்யலாம் என்கிறார்.
ஓட்ஸ் மற்றும் தேன் சருமத்தை மிருதுவாக்குகிறது, சருமத்தின் பிஎச் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது. இறந்த செல்களை நீக்குகிறது, ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்தது.
எனினும், உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு பொருள்களை அல்லது தயாரிப்புகளை பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.