சிலிண்டர் தட்டுப்பாடு! அலைமோதும் மக்கள்!

மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு ஏற்றுமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், புணேவில் உள்ள எரிவாயு சிலிண்டர் நிறுவனத்துக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து எரிவாயு நிரப்பிச் செல்லும் மக்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை எரிவாயு நிறுவனங்கள் நிறுத்திவைத்துள்ளன.

5 நட்சத்திர விடுதிகள் முதல் சாலையோர டீக்கடை, தட்டுக்கடை வரை படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. நகரங்களில் உணவகங்களை நம்பி தங்கியிருக்கும் தனியர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த இரு நாள்களாக எரிவாயு விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு மக்களால் தொடர்புகொள்ள இயலவில்லை. இதனால், எரிவாயு கிடைக்காமல் மக்கள் அலைமோதி வருகின்றனர்.

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...