சிலிண்டர் தட்டுப்பாடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வரும் நிலையில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பெண் எம்.பி.க்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பல்வேறு பகுதிகளில் சிலிண்டருக்கு பதிலாக மக்கள் விறகு அடுப்பு பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்திலும் விறகு அடுப்புடன் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்களை பீதியடைய வேண்டாம் என்று கூறும் பிரதமர் மோடியே அதானி வழக்கு, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உள்ளிட்ட பல காரணங்களால் பீதியில் இருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...