ருசியாக சமைக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ...

தயிர் உறைக்கு வைக்கும்போது மண்பாண்டத்தில் பாலை ஊற்றி உறை சேர்த்தால், தயிர் கெட்டியாக இருக்கும்.

முட்டைக்கோஸை நறுக்கும்போது அதிலுள்ள தண்டுகளைத் தூக்கி எறிந்து விடாமல் சாம்பாரில் போட்டு சமைத்தால் ருசியாக இருக்கும். சாம்பார் மிகுந்து விட்டால் அதில் கோதுமை மாவைச்சேர்த்து சுவையான சப்பாத்தி செய்யலாம்.

குலோப் ஜாமூன் செய்தபிறகு மிகுந்துவிட்ட ஜீராவில், கோதுமை மாவைக் கலந்து உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் வித்தியாசமான சுவையில் புது ஸ்வீட் தயாராகிவிடும்.

காய்கறிகள், கீரை வேகவைத்த நீரை ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயாராகிவிடும்.

தேங்காய் சட்னி செய்யும்போது, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.

ரவா கேசரி செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலை மாவை நெய்யில் வறுத்தெடுத்து கேசரியுடன் கலந்தால் சுவையாக இருக்கும்.

ஒரு கைப்பிடி மைதாவும், ஒரு கைப்பிடி கேழ்வரகு மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால், ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...