வாசல் அல்லது பொதுவான திடல்களில் மக்கள் ஒன்று கூடித் தொழுகையை நிறைவேற்றுவது- வணங்கி வாழ்வது என்னும் வரிகளில் சொல்லப்படுகிறது.
ஜக்காத் எனப்படும் இந்த ஏழைகளின் வரி, மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்டிருப்பதை மிக முக்கியமான அம்சமாகப் பார்க்க வேண்டும்.
இறப்பு வருகிற போது உங்கள் கையில் இருக்கும் எல்லாப் பொருளும் பயனற்றுப் போய்விடும். இடுப்பிலிருக்கும் அரைஞாண் கொடியைக் கூட அறுத்துப் போட்ட பிறகே மனிதர்களை மண்ணில் புதைப்பார்கள். ஆனால், மறுமையில் நீங்கள் சொர்க்கத்தில் பிரவேசிக்க வேண்டுமானால் அதற்கான நாணயம் ஒன்று உங்கள் கையில் இருக்க வேண்டும்.
அந்த நாணயம் நீங்கள் இந்த உலக வாழ்வில் சம்பாதித்த நேர்மை-- நல்ல செயல்கள்!-- என்பவையே உங்களுக்கு மறுமையில் பயன்படும். இதை மிகத் தெளிவாக வரையறுத்து வைத்திருக்கிறது இஸ்லாம் மார்க்கம்.