சமூகத்தில் நடைபெறும் அனைத்துச் சீர்கேடுகளுக்கும் அரசு மட்டுமே பொறுப்பல்ல.சிறப்பாக மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்கள் அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடக் கூடியவர்கள்.
அங்கு அரசு என்பது குறைவாகவும் மக்கள் செயல்பாடுகள் என்பது அதிகமாகவும் இருக்கும். அந்த நிலையில் அரசு மக்களின் முன்னெடுப்புக்கு உதவிடும் ஓர் அமைப்பு, அவ்வளவுதான்.
குடிமக்கள் பொறுப்புடன் செயல்பட செயல்பட அரசின் உருவம் குறைந்துவிடும். இந்தச் சூழலைக் கொண்டுவர கல்வி தேவைப்படுகிறது.
சமூகம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு செயல்படும்போது, அங்கு காவல் துறை தேவை இல்லை. சமூகம் ஒழுங்கீனமாகச் செயல்படும்போது அது தேவையாகிறது.