அறம் இல்லாத பொருள் சேர்க்கையும், அறம் இல்லாத இன்ப நுகர்வும் பழித்தற்குரியது. சமூக அளவில் புறக்கணிப்புக்கும் தண்டனைக்கும் உரிய தீயசெயல் என நம்பினர் தமிழர்கள்.
மூன்று ரத்தினங்கள்' என்று நல்ல நம்பிக்கை, நல்ல அறிவு, நல்ல நடத்தை ஆகிய மூன்று கோட்பாடுகளே சமணத்தின் அடிப்படை என்றார் வர்த்தமான் மகாவீரர்.
அன்னதானம், அபயதானம், ஔடததானம், சாத்திரதானம் எனும் நான்கு தானங்கள் செய்வதை சமணர்கள் தங்கள் கடமையாகக் கருதினர்.
அன்னதானம், அபயதானம், ஔடததானம், சாத்திரதானம் எனும் நான்கு தானங்கள் செய்வதை சமணர்கள் தங்கள் கடமையாகக் கருதினர்.
சமண சமயம் தமிழ்நாட்டில் தழைத்தோங்க முக்கியமான காரணம் அவர்கள் சமயக் கொள்கைகளைத் தமிழ்மொழி வழியாக எடுத்துக் கூறினார்கள்.மதுரை, திருச்சி, சேலம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் சமணர்கள் சிறப்பாக வாழ்ந்த குறிப்புகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமண சமயம் வடபுலத்திலிருந்து வந்திருந்தாலும் சமணக் கோயில்கள் தமிழகத்தின் கோயில்களை ஒத்திருக்கின்றன. வழிபாட்டிலும் தமிழர் மரபும், வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
மகாவீரர் வழங்கிய அஹிம்சை முதலான நற்செய்திகள் இன்றைய உலகுக்கும் மிகவும் பொருத்தமானவையும் அவசியமானவையும் ஆகும்.
வன்முறை, போர், சண்டைகள் இல்லாத உலகம் அஹிம்சை என்ற கொள்கையின் வழியாக மட்டுமே சாத்தியமாகும். மகாவீரர் தோன்றிய இந்தப் புனித நாளில் அறத்தின் வழியில் வாழ நாமும் உறுதி ஏற்போம்.