அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் "மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் சுருக்கமாக "ஹாக்கா' (HACA) என்று அழைக்கப்படுகிறது.

"மேற்குத் தொடர்ச்சி மலை கவலையளிக்கும் அளவுக்குச் சீரழிந்து வருகிறது. இதற்குக் காரணம் "வளர்ச்சி' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் பொருளாதார, சமூக மேம்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு, மெல்லிய சுற்றுச்சூழலையுடைய மலைப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் இயற்கை வளங்களை எடுத்துப் பயன்படுத்துகின்றன.

இதனால், மலைப் பகுதிகள் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதமடைகின்றன. இதைத் தடுக்கும் விதமாக மலைப் பகுதிகளில் பல கட்டுப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகளை வழிமுறைப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் இந்த ஆணையம் உருவாக்கப்படுகிறது' என்று அந்த அரசாணை கூறுகிறது.

2011-இல் மேற்குத் தொடர்ச்சி மலை மிக வேகமாக அழிந்து கொண்டிருந்த காரணத்தால் அப்போதைய மத்திய அரசு, சுற்றுச்சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமங்கள் எடுப்பதற்கும், அணைகள் கட்டுவதற்கும், சுற்றுலாவுக்கும் எல்லாவிதக் கட்டுமானங்களுக்கும் மொத்தமாக தடை விதித்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அரசு அமைத்த குழுவின் அறிக்கையை அந்த அரசே ஏற்கவில்லை! கஸ்தூரிரங்கன் குழு காட்கில் குழுவின் பரிந்துரைகளைத் திருத்தி, மத்திய- மாநில அரசுகளின் திருப்திக்கேற்ப ஓர் அறிக்கையை வெளியிட்டது.அதன் பலனாக "வளர்ச்சி' என்ற பெயரில் மேற்குத் தொடர்ச்சி மலை இன்னும் அதிவேகமாகச் சீரழிய ஆரம்பித்தது.

முந்தைய திமுக அரசு 24. 02.26 அன்று ஓர் அரசாணை வெளியிட்டது. அதில் "வீட்டுமனைத் திட்டங்களின் அனுமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக' இந்த அரசாணை வெளியிடப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இருக்கிறது இந்த அரசாணை!

இதன்படி, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல, இந்த பாதுகாப்பு ஆணையத்தின் வளையத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டுவிட்டன. அங்கெல்லாம் இனிமேல் ஆணையத்தின் அனுமதியில்லாமலேயே விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக்கப் படலாம்; கனிம வளங்கள் எடுக்கப்படலாம்; சாலைகள் போடப்படலாம்; ரிசார்ட்டுகள் கட்டப்படலாம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...