தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாகத் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை அவர்கள் பெறவில்லை.
இந்த இக்கட்டான சூழலில், தவெகவுக்கு(107 எம்எல்ஏக்கள்) காங்கிரஸ்(5), இந்திய கம்யூனிஸ்ட்(2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(2) ஆதரவு கிடைத்தது.
நீண்ட இழுபறிக்குப் பின், தவெக ஆட்சியமைக்க அக்கட்சிக்கு நிபந்தனையில்லா ஆதரவை நல்குவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று (மே 9) அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெக ஆட்சியமைக்க அக்கட்சிக்கு நிபந்தனையில்லா ஆதரவை நல்குவதாக இன்று அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து, தவெகவுக்கு மொத்தம் 120 எம்எல்ஏக்கள் (விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் தவெகவில் 107* எம்எல்ஏக்கள்) ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை தமிழக ஆளுநரிடம் இன்று(மே 9) மாலை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.
இதனையடுத்து, தமிழக முதல்வராக விஜய்யை நியமித்து புதிய அரசு அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்யிடம் நியமன கடிதத்தை வழங்கினார்.
மே 10 காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.