தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மரியாதைநிமித்தமாக விஜய், ஸ்டாலினைச் சந்தித்து பேசியுள்ளார்.
வீட்டிற்கு வந்த விஜய்யை முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றார்.
பின்னர் ஸ்டாலினும் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.
பின்னர் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். உதயநிதி, அமைச்சர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்துடன் தன்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.