ரெங்கா ரெங்கா கோஷத்துடன் அரங்கநாதர் தேரோட்டம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவது ஸ்ரீரங்கம்.

தமிழகத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து நம்பெருமாளை தரிசனம் செய்வர்.

ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 9 ஆம் நாளான இன்று (மே 14) காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்