முதல்வர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்திருப்பதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழகமும் ஆறுதல் பெருமூச்சு விடுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க எதிர்க்கட்சியான திமுகவும், ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் திமுகவின் சில கூட்டணிக் கட்சிகளும் நிர்ப்பந்தித்திருக்கின்றன. அதை முதல்வர் ஜோசப் விஜய் எப்படி கையாளப் போகிறார் என்பதில்தான் அவரது வெற்றி வியூகம் கட்டமைக்கப்படும்
குதிரை பேரம் நடந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக ஆகியவற்றால் முன்வைக்கப்படுகிறது. அப்படி குதிரை பேரம் நடந்திருந்தால், தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை வழங்காத வாக்காளர்கள்தான் குற்றவாளிகள். ஆட்சி அமைக்க இயலாமல் மீண்டும் தேர்தலுக்கு வழிகோலியிருந்தால், தவெகவை வாக்காளர்கள் மன்னித்திருக்க மாட்டார்கள்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது வரையிலான காலகட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அணுகுமுறையும், செயல்பாடுகளும், தமிழகத்தில் நிலைநாட்டப்பட்டிருக்கும் வழக்கங்களிலிருந்து மாறுபடுகிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
முதல்வர் ஜோசப் விஜய் அரசின் ஏற்றம் தரும் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தமிழகம்!