வாய் துர்நாற்றத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

பல் சொத்தை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வாய் துர்நாற்றம் இருந்தால் அது பற்களில் பிரச்னைகள் இருப்பதைக் காட்டுகிறது.

எனவே, வாய் துர்நாற்றத்தைப் போக்க தினமும் இரு முறை பல் துலக்க வேண்டும். ஏனெனில் வாயில் உள்ள பாக்டீரியாக்கள்தான் வாய் துர்நாற்றத்திற்குக் காரணம்.

பற்களுக்கு இடையே உள்ள அழுக்குகளை நீக்க தினமும் ஃபிளாசிங் (பற்களுக்கு இடையே உள்ள அழுக்குகளை நீக்கும் முறை) செய்ய வேண்டும்.

பற்களின் இடையே உள்ள பாக்டீரியாவை நீக்கக் கூடிய மவுத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்புளிக்க வேண்டும்.

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இரவு தூங்கச் செல்லும் முன் பல் துலக்க வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகுவது பல் சுகாதாரத்தைப் பேண உதவும்.

காபி, புகையிலை, காரத்தன்மை கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பற்களில், ஈறுகளில் பிரச்னை வந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம். அதேபோல வாய் துர்நாற்றம் தொடர்ந்து இருந்தாலும் மருத்துவரை அணுகுவது நல்லது.

முழுச் செய்திக்கு...