1990-களின் காதல் நாயகன், கோலிவுட்டின் சாக்லேட் பாய் என அறியப்படும் அப்பாஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகளுக்குப் பின் 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரைத்துறைக்கு வருகிறார்.
காதல் தேசம் படத்தில் வந்த அப்பாஸை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
தற்போது ஆக்லாந்தில் வாழ்ந்து வரும் அப்பாஸ், தனது வாழ்க்கையில் பட்ட துன்பங்களால் உத்வேகம் அளிக்கும் பேச்சாளராகவும் மாறியிருக்கிறார்.
திரைத் துறையில் மீண்டும் தடம் பதிக்கும் அப்பாஸ், இந்த முறை சிறந்த பாத்திரைங்களைத் தேர்வு செய்து நடிக்கத் தயாராகி வருகிறார்.