அவளை அதிகம் மிஸ் செய்தேன்.. விஜய் தேவரகொண்டா உருக்கம்!

அவளை அதிகம் மிஸ் செய்தேன் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்..

நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா திருமணம் பிப்.26ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இது பற்றி அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வெளியிட்டிருக்கும் பதிவில், ஒரு நாள், நான் அவளை மிஸ் செய்தேன் என்று பதிவிட்டிருந்தார்.

அவள் என் அருகில் இருந்திருந்தால் என் நாள் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றும் விதத்தில் அவளை அதிகம் மிஸ் செய்தேன். அவள் என் எதிரில் அமர்ந்திருந்தால் என் உணவு இன்னும் ஆரோக்கியமாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். அவள் என்னுடன் உடற்பயிற்சி செய்திருந்தால் என் உடற்பயிற்சிகள் மிகவும் வேடிக்கையாக இருந்திருக்கும்.

அதனால், நான் என் சிறந்த தோழியை என் மனைவியாக ஆக்கிக்கொண்டேன் என்று பதிவிட்டிருந்தது இரண்டு நாள்களாக வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...