ஒன்ஸ் மோர் வெளியீடு பற்றிய தகவல்!

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் திரைப்பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியானது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படம் ஒன்ஸ் மோர்.

நவீன கால இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹிருதயம், குஷி (தெலுங்கு) படங்களுக்கு ஹெஷேம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில் பட வெளியீடு தள்ளிப்போனது.

இதனைத் தொடர்ந்து, ஒன்ஸ் மோர் திரைப்படம் வருகிற கோடை வெளியீடாக திரைக்கு வரும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...