சுமார் 50 ஆண்டுகளுக்குக் பின், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் மூலம் நிலவுக்கு அருகே விண்வெளி வீரர்களை அனுப்பியது. இந்த விண்கலம் பூமியிலிருந்து அதிக தொலைவு சென்று சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள தேசிய விண்வெளி நிலையம் (நாசா), கடைசியாக 1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பியிருந்தது.
மீண்டும் தற்போது ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஆர்டெமிஸ் -2 என்ற திட்டத்தின்கீழ் ஓரியன் விண்கலம் மூலம் 4 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுக்கு அனுப்பியது.
நிலவில் இறங்காமல் அதனை மிக அருகில் சுற்றி, 4 பேரும் ஆராய்ச்சி செய்யும் வகையில் ஆர்டெமிஸ் -2 திட்டம் திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல்முறையாக நிலவின் பின்புறத்தை விண்வெளி வீரர்கள் நேரடியாக பார்த்தனர். இதுவரை நிலவின் பின்புறத்தை செயற்கைக்கோள் புகைப்படம் மூலமே உலகம் பார்த்திருக்கிறது.
ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து 4,06,771 கி.மீ. தொலைவு வரை இன்று அதிகாலை சென்றதாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம், பூமியிலிருந்து அதிக தொலைவு பயணித்தவர்கள் என்ற சாதனையை விண்வெளி வீரர்கள் ரீட், விக்டர், கிறிஸ்டினா மற்றும் ஜெர்மி ஆகியோர் படைத்துள்ளனர்.