கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெய்யில் மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நீடிக்கிறது.

வெய்யில் நேரத்தில் வெளியே சென்றால் குடை கொண்டு செல்லலாம். வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்தலாம்.

வெய்யிலில் வேலை செய்யும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

முகம், கை, கால்களுக்கு சன் ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.

நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டரும், பெண்கள் 3 லிட்டரும் தண்ணீர் குடிக்கலாம்.

ஜீன்ஸ் லெக்கின்ஸ் உள்ளிட்ட இறுக்கும் ஆடைகளைத் தவிர்க்கலாம்.

குழந்தைகள், முதியோர்கள் 12 மணி முதல் 4 மணி வரை வெய்யிலில் வருவதைத் தவிர்க்கலாம்.

வெய்யிலால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுத்தமான தண்ணீர், ஓஆர்எஸ் கரைசல், இளநீர் அதிகம் பருகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்