இல்லறத்தில் தொடரட்டும் ஒற்றுமை

திருமணம் என்பது இருவர் ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமல்ல; இரு மனங்கள், இரு குடும்பப் பின்னணிகள், இரு பழக்கவழக்கங்கள் இணைந்து ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கும் நெடும்பயணம். திருமணத்தைப் பாதுகாப்பது பெரிய தியாகங்களால் மட்டும் நிகழ்ந்துவிடுவதில்லை; அன்றாட வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் மதிக்கும் எளிய, சிறிய பழக்கங்களால்தான் அது நிலைத்து நிற்கிறது.

அந்தப் பயணம் இனிமையாக அமைய அன்பு, புரிதல், மரியாதை, பொறுமை மற்றும் வெளிப்படையான உரையாடல் ஆகியவை தொடர்ந்து தேவைப்படுகின்றன.

தனது ஆன்மிக, அறிவுப் பயணத்தில் மனைவி லோகாம்பாளின் துணையும் பங்களிப்பும் முக்கியமானவை என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுள்ளார். அந்த நன்றியுணர்வை நினைவுகூரும் வகையில் மனவளக்கலை அமைப்புகளில் ஆகஸ்ட் 30 'மனைவி நல வேட்பு நாள்' எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.

குடும்ப வாழ்க்கையில் ஒருவர் செய்த பங்களிப்பை மற்றவர் இயல்பாக எடுத்துக்கொள்ளாமல், அதை உணர்ந்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதே இதன் முக்கியச் சிந்தனை.

குடும்பம் என்பது சுவர்களால் உருவாவதல்ல; தம்பதியரிடையேயான பரஸ்பர நம்பிக்கையால் கட்டமைக்கப்படுவது. அந்த நம்பிக்கையை தினமும் சிறு செயல்களால் போற்றிப் பாதுகாத்தால், குடும்ப நலனும் சமூக ஒற்றுமையும் இயல்பாகவே தழைத்தோங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக்கட்டுரையையும் படிக்க...