இணையதளச் செய்திப் பிரிவு
தங்கம் வாங்குவது பற்றி மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் சில கொள்கைகளை வகுத்து விதிகளை அறிவித்துள்ளன. அவற்றையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நகைக் கடைக்குச் சென்று ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கும்போது, ஒருவர் தன்னுடைய பான் அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும். இது கட்டாயம்.
ரூ.10 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்குவதாக இருந்தால், பான் அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழையும் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
ஒரேடியாக ரூ.10 லட்சத்துக்கு பில் போட்டால்தான் பிரச்னை என்று நினைக்கலாம். ஆனால் ஒருவர் வாங்கும் தங்கத்துக்கு ரசீதுகளை பிரித்துப் போடக்கூடாது. அவ்வாறு செய்தால், நகைக் கடை மீது நடவடிக்கை பாயும்.
தங்கம் விலைக்கு 3 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் செய்கூலிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி. இதையும் வாங்குபவர்கள்தான் செலுத்த வேண்டும்.
ஒரு லட்சத்துக்கு தங்கம் வாங்கினால் ஜிஎஸ்டியே விலை மற்றும் செய்கூலிக்கு ஏற்ப கிட்டத்தட்ட ரூ.8000 வரலாம்.
ஒரு நகைக்கடைக்காரர் ஜிஎஸ்டி வசூலிக்கும்பட்சத்தில், நகை வாங்குபவருக்கு அளித்த ரசீதில் அவருடைய ஜிஎஸ்டி கணக்கு விவரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும்போது செபி / ஆர்பிஐ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட தளங்களில்தான் வாங்க வேண்டும்.
ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கும்போது, பணமாகக் கொடுத்து தங்கம் வாங்க முடியாது. யுபிஐ / வங்கிப் பணப்பரிமாற்றம் / வங்கி அட்டைகள் மூலமாகத்தான் வாங்க முடியும்.
எப்போது தங்கம் வாங்கினாலும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்கிக் கொள்வது சட்ட ரீதியான நடவடிக்கைகளை சமாளிக்க உதவும். எப்போதும் ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகளை வாங்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.