இணையதளச் செய்திப் பிரிவு
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.4) கடைசி நாளாகும்.
அடுத்த கல்வியாண்டில் (2026-2027) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தோ்வு மே 11 முதல் 31 வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜன.3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் புதன்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் https://cuet.nta.nic.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத்தை பிப்.7 வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பிப்.9 முதல் 11 வரை வாய்ப்பு வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு என்டிஏ இணையதளங்களான https://nta.ac.in மற்றும் https://cuet.nta.nic.in-ஐ தொடர்ந்து கண்காணிக்கவும் என தேர்வர்களுக்கு என்டிஏ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.