பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுமா?

இணையதளச் செய்திப் பிரிவு

பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் முறையாக சமைக்காத கோழி இறைச்சியை உண்ண வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை அடையாறில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், ஹெச்5 என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவும். மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ, மனிதரிடமிருந்தோ மற்றவா்களுக்கு, ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மக்கள் கவனமாக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவா்களை நாடுமாறு பொது சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

மேலும் காகம், கோழி போன்ற பறவைகள் திடீரென காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இறந்தால் அவற்றை உடனடியாக ஆழமாக குழி தோண்டி புதைக்க வேண்டும். நோயால் இறந்த கோழியின் இறைச்சியை உண்ண வேண்டாம்.

இறைச்சிக்காக வெட்டப்படும் கோழிகளைக்கூட நன்றாக சமைத்தே உண்ண வேண்டும். பாதி வேக வைத்த மாமிசங்களைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ENS

தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்