பிரதமரின் புதிய அலுவலகம் சேவா தீா்த்!

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் பிரதமரின் புதிய அலுவலகமான ‘சேவா தீா்த்’ மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்களை உள்ளடக்கிய கடமை பவன் 1, 2 கட்டட வளாகங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

PTI

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்கள், சென்ட்ரல் விஸ்டாவில் பல்லாண்டுகளாக வெவ்வேறு இடங்களில், பழைமையான கட்டடங்களில் செயல்பட்டுவந்த நிலையில், மேற்கண்ட புதிய கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

PTI

‘சேவா தீா்த்’ (சேவை புனிதத் தலம்) எனும் புதிய பிரதமா் அலுவலக வளாகத்தில் பிரதமா் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், மத்திய அமைச்சரவை செயலகம் ஆகியவை அமைந்துள்ளன.

PTI

புதிய பிரதமர் அலுவலகத்தில் பூஜைகள் செய்த பிரதமர் மோடி.

PTI

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை, பெண் லட்சாதிபதிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கான கோப்புகளில் பிரதமர் கையெழுத்திட்டார்.

PTI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்