இணையதளச் செய்திப் பிரிவு
நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் கூறுகையில், ‘மதிப்பெண் கூட்டல் போன்றவற்றில் ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்க மாணவா்கள் விண்ணப்பிப்பா்.
விடைத்தாள்களை கைகளால் திருத்துவதற்குப் பதிலாக கணினி வழியாக டிஜிட்டல் முறையில் திருத்துவதன் மூலம், அவற்றைத் திருத்துவதில் ஏற்படும் பிழைகள் களையப்படும்.
விடைத்தாள்களை டிஜிட்டல் வழியில் திருத்தி மதிப்பிடும் முறைக்கு சிபிஎஸ்இ முழுமையாக மாறுவதால், நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது’ என்றாா்.
எனினும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் நேரடியாக கைகளால் திருத்தும் முறையே தொடர உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.