இணையதளச் செய்திப் பிரிவு
தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை நாள்தோறும் மக்கள் கேட்டறிந்து வருகிறார்கள். ஆனால், இதுநாள் வரை தங்கம், வெள்ளி விலைகளை விட அதிகமாக இருந்து வந்த பிளாட்டினம் விலை இப்போது எப்படி இருக்கிறது என்று அறியலாம்.
ஜனவரி 23ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் பிளாட்டினம் சென்னையில் ரூ.8,952க்கும், 8 கிராம் பிளாட்டினம் ரூ.71,616க்கும் விற்பனையாகிறது.
ஜனவரி மாதம் முதலே, பிளாட்டினம் விலை படிப்படியாக நாள்தோறும் உயர்வைக் கண்டு வருகிறது.
SILVER-UNSPLASH102102.JPG
| Center-Center-Delhiஇரண்டு நாள்களுக்கு முன்பு, க்ரீன்லாந்து மீது ராணுவம் பயன்படுத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த அன்று மட்டும், தங்கம், வெள்ளி விலைகளுடன் பிளாட்டினம் விலையும் குறைந்தது. ஆனால் மீண்டும் அதன் விலை உயர்வு தொடர்ந்தது.
தங்கம் வெள்ளி போல தொடர்ச்சியாக மூன்று மாதங்கள், பிளாட்டினம் விலை உயர்ந்து வருகிறது. நவம்பர் மாதம் இந்த விலை உயர்வு 7 சதவிகிதமாக இருந்தது, டிசம்தில் 20 சதவிகிதமாக இருந்த நிலையில், இன்று வரை ஜனவரியில் இந்த விலை உயர்வு 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலர் பலவீனமடைந்து வருகிறது. இதனால், இதர நாடுகளின் பணத்தில் உலோகங்களை வாங்குவது மலிவாகிறது. இதனால் பலரும் உலோகங்களில் முதலீடு செய்ய முனையும்போது, அதன் விலை உயருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.