பிறப்பு சான்றிதழில் பெயா் சேர்க்க அவகாசம்!

இணையதளச் செய்திப் பிரிவு

பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் சோ்ப்பதற்கான அவகாசம் வரும் செப்டம்பா் மாதம் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

பொதுவாகவே பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயா்களைச் சோ்த்துக் கொள்ளலாம். அதன் பின்னா் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படாது.

Center-Center-Delhi

கடந்த 2000-ஆம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவா்களும், அதற்கு பிறகு பிறந்தவா்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக பெயா்களைச் சோ்ப்பதற்கான அவகாசம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

தற்போது இறுதி வாய்ப்பாக வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பெயா்களைச் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்