தமிழர்கள் தனித்த போக்கினர்!

இந்தியாவெங்கும் ஒரு கட்டத்தில், காங்கிரசு சரியச் சரிய, அந்த இடங்களைப் புதிதாகத் தோன்றிய மாநிலக் கட்சிகள் கைப்பற்றிக் கொண்டன! மாற்றுக் கட்சிகள் பெரும்பாலும் சாதி அடிப்படையில் முளைத்தவை! தமிழ்நாடு மட்டுமே விதிவிலக்கு!

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் தன் சமூகத்தோடு முசுலீம்களை இணைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தார்! அதே உ.பி.யில் அவருக்கு மாற்றாக உருவெடுத்த எண்ணிக்கை வலிமையுடைய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதி, அதே முசுலீம்களையும், ஓரளவு கணிசமான பார்ப்பனர்களையும் இணைத்துக் கொண்டு, யாதவர்களுக்கு மாற்றாக ஆட்சி அமைத்தார்!

பெரும்பான்மையான மாநிலங்களில் அடித்தளம் இல்லாத ஊழலில் புழுத்து வடியும் சாதிக் கட்சிகள் வெளியேற்றப்பட்டு, மீண்டும் தேசியம் குறிப்பாக பா.ச.க. கொடி கட்ட முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 1967-இல் வெளியேற்றப்பட்ட காங்கிரசு இன்று வெறும் ஐந்து இடங்களாகச் சுருங்கி விட்டது.

ஒரு திராவிடத்திற்கு இன்னொரு திராவிடம் மாற்று என்னும் அரை நூற்றாண்டு முறையை, "ஊழலுக்கு ஊழல் மாற்றாகாது' என்று தமிழ் மக்கள் மாற்றிய நிலையில், புதுக் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைதான் என்றாலும், ஒரு மாநிலக் கட்சியைத் தேர்வு செய்து, தேசியக் கட்சிகள் இரண்டையும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பிய தமிழர்கள் தனித்த போக்கினர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க....