ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல்!

விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு மற்றும் உள்நாட்டுப் போர்க்கப்பல் கட்டுமானத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் மற்றொரு மைல்கல்.

ஆறாவது போர்க்கப்பலான "ப்ராஜெக்ட் 17ஏ" ரகத்தைச் சேர்ந்த மகேந்திரகிரியை விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார்.

துறைமுக நகரத்தில் உள்ள கடற்படைத் தளத்தில், மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

மும்பை மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது மகேந்திரகிரி போர்க்கப்பல்.

மசகான் டாக் ஷிப், இந்திய கடற்படை, ஐ.என்.எஸ் மகேந்திரகிரியின் பணியாளர்கள், நாட்டு மக்களுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்