மேலும் சிறக்க வேண்டும் அரசுப் பள்ளிகள்!

கடந்த மாத நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் 3.37 லட்சம் மாணவ- மாணவிகள் புதிதாக சேர்ந்து இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிடக் குறைவாக உள்ளது. இதற்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர். டி.இ.) ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை கல்வியில் இலவசமாக சேர்க்கப்பட வேண்டும் என்ற விதியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

2024-25-ஆம் கல்வியாண்டு முதல் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் நடைமுறைக்கு முன்னதாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்வது அதிகரித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், மதிய உணவு திட்டம், இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடை எனப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டாலும் இவை அனைத்துக்கும் மேலாக தரமான கல்வியையே பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் எதிர்பார்க்கின்றனர். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2025-26-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 91.86 சதவீதமும், 12-ஆம் வகுப்பில் 95.20 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 98.14 சதவீதமும், 12-ஆம் வகுப்பில் 86.58 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ஆம் வகுப்புக்கான தேர்வில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க...