நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதமாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த சிஜேபி ஆதரவாளர்கள் முயற்சி.
தில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு.
தடையை மீறி பேரணி செல்ல முயன்ற மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறை, துணை ராணுவப் படை தடியடி.
சிஜேபி ஆதரவாளர்கள், மாணவர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.
சிஜேபி பேரணி, போராட்டத்தை அடுத்து, நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் சுற்றுப் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்.
சிஜேபி ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்.