ஏரிகள் பராமரிப்புக்கு முன்னுரிமை

பழங்காலத்தில் ஏரிகளைப் பராமரிக்கவும், மழைக் காலங்களில் ஏரிகள் நிரம்பி கரைகள் உடையாமல் இருப்பதைக் கண்காணிக்கவும் காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஏரிகளைத் தூர் வாருவது, கரையைப் பலப்படுத்துவது போன்ற பணிகளில் மக்களே தாமே ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதை "குடிமராமத்து' என்று அழைத்தனர்.

பத்தாம் நூற்றாண்டில் ராஜாதித்த சோழ மன்னரால் வெட்டப்பட்ட சுமார் 15 கி.மீ. சுற்றளவு கொண்ட வீராணம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி ஆகும். உலகில் மனித ஆற்றலால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்கம் என்ற பெருமை வாய்ந்த வீராணம் ஏரி, சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் நீர்ப்பாசனத் தேவையை நிறைவு செய்வதுடன், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாக உள்ளது.

நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான ஏரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகமும் ராஜஸ்தானும் திகழ்கின்றன. தமிழகத்தில் பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 39,202 ஏரிகள் உள்ளன. இதில் நீர் வளத் துறை கட்டுப்பாட்டில் 13,710 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக, ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளன.

1906-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னையில் மட்டும் சுமார் 474 ஏரிகள் இருந்துள்ளன. ஆனால், தற்போது உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 43 மட்டுமே. பெரும்பாலான ஏரிகள் தூர்க்கப்பட்டு, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் தொழிற்பேட்டைகள் என உருமாற்றம் பெற்றுவிட்டன.

முழுக் கட்டுரையும் படிக்க....