பொறுப்புணர்வு வீடுகளில் இருந்து தொடங்கட்டும்!

நம் வீட்டு வாசலில் நிற்கும் இருக்கும்போது, சாலையில் சைக்கிளிலோ மோட்டார் சைக்கிளிலோ யாராவது இரண்டு முறை கடந்து போனால் அச்சம் வருகிறது. சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டிய அவசியம் காவல் துறைக்கு மட்டும் அல்லாமல், வீடுகளுக்கும் அவசியமாகி விட்டது.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் என்று பாதுகாப்பு சாதனங்களுடன் செல் என்று பெற்றோர் சொல்ல வேண்டி இருக்கிறது.

பிள்ளைகளின் முகங்களிலும் நடைமுறைப் பாவனைகளிலும் வித்தியாசத்தையோ, அழுத்தத்தையோ பார்த்தால்கூட, அவர்களை அருகே அழைத்து, என்ன ஏது என்று இயல்பாகக் கேட்க முடிவதில்லை.

போதை மட்டுமே மனிதனை மனிதத் தன்மையை மறக்க வைக்கும் ஒரே விஷயம். மனிதத் தன்மையை இழந்தால் மட்டுமே எந்தக் கயவனாலும் சக பெண்ணைத் தவறான எண்ணத்துடன் பார்க்க முடியும்.

கயவன் உருவாவதற்கும், கயவனிடம் பாதிப்படைவதற்கும் ஒரே அடிப்படைக் காரணம் அன்புக்கான ஏக்கம் என்பதை உணர வேண்டும்.

குழந்தைகள், பெண்கள் விஷயத்தில் கேவலம் செய்யும் எவருக்கும் தூக்குத் தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றங்கள் தயங்கவே கூடாது.

நம் மகள்களை சில மகன்களிடமிருந்து பாதுகாத்தால்தான் அந்த மகன்களையுமே காப்பாற்ற முடியும்' என்பதுதானே பொறுப்பான சமூக சிந்தனை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க....