வருமான வரிக் கணக்கு ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?

வரி செலுத்துகிறோமோ இல்லையோ, அனைவரும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

ஐடிஆர் என்பது, வரி செலுத்துவது மட்டுமல்ல, மாத வருவாய் ஈட்டும் ஒவ்வொருவரும், தங்களது வருவாய் குறித்த கணக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பதற்கான ஆவணமாகும்.

சரியான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து வந்தால், ஏதேனும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் கடன் கோரும்போது எளிதாகக் கிடைக்கும்.

ஒருவரது வருமானத்துக்கு அதிகமாக வரிப் பிடித்தம் அல்லது டிடிஎஸ் பிடிக்கப்பட்டிருந்தால், ஐடிஆர் தாக்கல் செய்து அதிகப்படியாக செலுத்திய வரியைத் திரும்பப் பெறலாம்.

வருமானச் சான்றிதழ் இல்லாத, சுய தொழில் செய்பவர்கள், அமைப்பு சாரா பணியில் இருப்பவர்கள், சொந்தமாக நிறுவனம் நடத்துபவர்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ ஆவணமாக மாற்றுகிறது ஐடிஆர் கணக்குத் தாக்கல்.

பங்குச் சந்தை, சொத்து, தொழிலில் முதலீடு செய்து அது நட்டமடையும்போது, எதிர்காலத்தில் அவர்கள் பெறும் லாபத்தின் போது கணக்கு நேர் செய்யப்பட உதவுகிறது.

விசா விண்ணப்பங்களின்போது, முறையாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருந்தால் அவர்களுக்கு விசா எளிதாகக் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரி