செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை

ஆதார், ஒருங்கிணைந்த கட்டண வசதி (யுபிஐ), நேரடிப் பயன்கள் பணப் பரிமாற்றம் (டிபிடி), ஜிஎஸ்டிஎன், கணக்கு ஒருங்கிணைப்பாளர் (அக்கவுன்ட் அக்ரிகேட்டர்) மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த கடன் வழங்கும் வசதி (யுஎல்ஐ) போன்ற தளங்கள், மக்கள் நிதி அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை அவற்றின் அடிப்படையிலேயே மாற்றியுள்ளன.

நேரடிப் பயன் பரிமாற்ற அமைப்புகள் எண்ம (டிஜிட்டல்) வழிகள் மூலம் இதுவரை மொத்தம் ரூ. 51 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை பணப் பரிமாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. அதேவேளையில், கசிவுகள் குறைக்கப்பட்டதாலும், பயனாளிகளைத் துல்லியமாக அடையாளம் கண்டதாலும் ஏற்பட்ட சேமிப்பு ரூ. 4.3 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

ஏஐ, டிபிஐ ஆகியவற்றின் இந்த ஒருங்கிணைப்பு, இந்திய நிதித் துறையின் கட்டமைப்பை அதன் அடிப்படை நிலையிலேயே மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் எண்ம நிதிக் கட்டமைப்பு உலக அளவில் தனித்துவமானது.

பணம் செலுத்தும் அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவின் ஒரு முக்கியப் பயன்பாடு மோசடியைக் கண்டறிவதாகும். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளால் பரிவர்த்தனை நடத்தையைப் பகுப்பாய்வு செய்யவும், அசாதாரண வடிவங்களைக் கண்டறியவும், சில விநாடிகளுக்குள் முரண்பாடுகளைக் கண்டறியவும் முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க...