நடுப்பக்கம்
இது பிரிட்டிஷ் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான 16-ஆவது கணக்கெடுப்பாகும். அதேபோன்று சுதந்திரத்துக்குப் பின்பான 8-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
வளர்ந்துவரும் அறிவியல் யுகத்திலும், பொருளாதார வளர்ச்சியின் ஏற்ற இறக்கங்கள், மக்கள் நலன் போன்றவற்றைக் கணக்கிடுவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டில் மிகுந்த அவசியமாக உள்ளது.
உலகின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியோவில் கி.மு. 3800-இல் தொடங்கப் பெற்றது. தொடர்ந்து, ஸ்வீடன் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1872-இல் மேயோ பிரபு காலத்தில் தொடங்கப்பட்டது.
என்றாலும், கி.பி. 1881-ஆம் ஆண்டு ரிப்பன் பிரபு காலத்தில்தான் இது முறையாகப் பின்பற்றப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு கடைசியாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.