யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை!

பிரபல விடியோ சமூகவலைதளமான யூடியூபில் பிரதமா் நரேந்திர மோடியை பின்தொடா்வோா் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டியுள்ளது.

இதன் மூலம் யூடியூப் தளத்தில் அதிகம் போ் பின்தொடரும் ஒரே சா்வதேச அரசியல் தலைவா் என்ற சாதனையைப் படைத்துள்ளாா். பிரதமா் மோடிக்கு அடுத்த இடத்தில் பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் போல்சனாரோ உள்ளாா். பிரதமா் மோடியைப் பின் தொடா்வோா் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் போல்சனாரோவை பின்தொடா்வோா் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காகவே உள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் ஒப்பிடும்போது பிரதமா் மோடியை ஏழு மடங்கு அதிகமானோா் பின்தொடா்கின்றனா். இதன்மூலம் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகமான மக்களைச் சென்றடையும் தலைவராகவும் பிரதமா் மோடி திகழ்கிறாா்.

இந்திய அளவில் பிரதமா் மோடி தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியைவிட மூன்று மடங்கு அதிகம் பின்தொடா்வோரை இந்தியாவில் பிரதமா் மோடி தன்வசம் வைத்துள்ளாா்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியைப் பின்தொடா்பவா்களைவிட நான்கு மடங்கு அதிகமானோா் மோடியைப் பின்தொடா்கின்றனா்.

கடந்த வாரம் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் 10 கோடி பின்தொடா்பவா்களுடன், உலகில் அதிகமானோா் பின்தொடரும் உலகத் தலைவா் மற்றும் அரசியல் தலைவா் என்ற பெருமையை பிரதமா் நரேந்திர மோடி பெற்றாா். 2014-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் மோடி இணைந்தாா். அப்போது முதல் சா்வதேச தலைவா்களில் அதிகம் பாா்வையைப் பெறுவதாகவும் பிரதமா் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...