கேரளத்தின் மொழி, கலாசார அடையாளத்தை மரியாதையுடன் அங்கீகரிக்கும் வகையிலும், மாநிலத்தின் பண்பாட்டு பெருமையையும், தாய்மொழி அடையாளத்தையும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மாற்றமாகவும் இது அந்த மாநில மக்களால் பார்க்கப்படுகிறது.
சொற் பிறப்பியல்ரீதியாக அறிஞர்கள், இதை சேர் மற்றும் ஆலம். அதாவது கடலால் சூழப்பட்ட நிலம் எனப் பெயர் காரணத்தையும் குறிப்பிடுகின்றனர்.
ஆங்கிலத்தில் கேரளா எனக் குறிப்பிடுவதை, கேரளம் என்றுதான் உச்சரிக்க வேண்டும். எழுத வேண்டும் என முதல்முதலில் அறிவுறுத்தியவர், 'தினமணி' நாளிதழின் முன்னான் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன்.ஒரு மொழியில், ஒரு பெயரை அல்லது ஒரு சொல்லை எவ்வாறு உச்சரிக்கிறார்களோ அதன்படியே தமிழிலும், எழுத வேண்டும். அதன் வேர்ச் சொல்லை கண்டறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு, 2016-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு, தன் மாநிலப் பெயரை பங்களா' என மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறது. அப்பெயர், வங்க தேசத்துடன் ஒத்துப் போவதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்கள், பிராந்திய அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களைக் காட்டிலும் அதிக வளர்ச்சி பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
ஒரு பெயரில் மனிதகுல வரலாற்றின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், சமூ சுப்படிநிலை, பாலினப்பாகுபாடு, அழகியல், அறிவார்ந்த மரபுகள், சாதனைகள், சமூகப் பங்களிப்புகள், சடங்கியல், இறையியல் எனப் பல்வேறு தகவல்கள் அடங்கியிருக்கின்றன.