மாணவர்கள் கல்வி பயில பல்வேறு அமைப்புகள் உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன. இதுபற்றிய தகவல்களை தற்போது மாணவர்கள் இணையதளங்கள் வாயிலாகவே அறிந்துகொள்ள வசதிகள் வந்துவிட்டன.
தேசிய உதவித் தொகை இணையதளம் (என்எஸ்பி) - இது மத்திய அமைச்சகங்கள், மாணவர்களுக்கு அளிக்கும் பல்வேறு உதவித் தொகை விவரங்களை வெளியிடும். இந்த இணையதளத்தின் முகவரி - www.scholarships.gov.in
மை ஸ்கீம் - மத்திய அரசு திட்டங்கள் மூலம் அளிக்கப்படும் உதவித் தொகை விவரங்களை வெளியிட்டு வருகிறது. இதன் முகவரி www.myscheme.gov.in
யுஜிசி உதவித் தொகை - முதுநிலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கான உதவித் தொகை விவரங்களை வெளியிட்டு வருகிறது. இதன் முகவரி www.ugc.gov.in/scholarships/stu_scholarship6
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான உதவித் தொகை - சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் ஒரே ஒரு பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகைத் திட்டங்களை அறியலாம். இதன் முகவரி www.cbse.gov.in/cbsenew/scholar.html
மாநில அரசுகளின் உதவித் தொகைகள் - மாநில அரசுகள், உள்ளூர் மாணவர்களுக்கு வழங்கும் உதவித் தொகைகளை அறிய அந்தந்த மாநில மாணவர்கள், அந்தந்த மாநில அரசின் கல்வித் துறை இணையதளங்களை நாடலாம்.