பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்!

இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டதால், இங்கு "பொது உரிமையியல் சட்டம்' அமல்படுத்தப்படவில்லை. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான இந்திய அரசமைப்புச் சட்டம் 44-ஆவது பிரிவு "இந்திய நிலப் பரப்பில் வாழும் மக்கள் ஒரே சீர்மையிலான பொது சிவில் சட்டத்தைப் பெற அரசு முயற்சி எடுக்க வேண்டும்' என்கிறது.

இந்தியாவில் வாழும் ஹிந்துக்களைத் தவிர, முஸ்லிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், யூதர்கள், பஹாய்கள் உள்ளிட்டோர் சிறுபான்மையினராகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஹிந்துக்களுக்கான சட்டங்கள் இயற்றப்படும் வரை, அவர்களின் தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட "யாக்ஞவல்கிய ஸ்மிருதி' மற்றும் அதன் உரைநூலான "மிதாக்ஷரா' மற்றும் "தயாபாகா' ஆகியவை குடும்பச் சொத்துரிமை குறித்த வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

சம்மதம் இல்லாமலோ இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதை ஹிந்து மதம் சட்ட விரோதமாகக் கருதுகிறது. ஆனால், முதல் மனைவி இருக்கும் போதே பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாத்தில் முன்பு, நீதிமன்றத்துக்குச் செல்லாமலேயே "தலாக்', "தலாக்', "தலாக்' என்று மூன்று முறை சொல்லி மனைவியை விவாகரத்து செய்யலாம். ஆனால், 2019-இல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து முத்தலாக் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமானது.

"பொது சிவில் சட்டத்துக்கு' ஆதரவாக டாக்டர் அம்பேத்கரும், நீதிமன்றங்களும் கூறியதையே, மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்தும் வழிமொழிந்துள்ளார். "ஒரே நாடு, ஒரே சட்டம்' என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறவும், டாக்டர் அம்பேத்கர் கனவை நனவாக்கவும், பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...