ஒருவர் சமூக ஊடகத்தில் ஒரு பொய்யான மருத்துவ ஆலோசனையைப் பகிர்கிறார். அதைப் பலரும் நம்புகிறார்கள். சிலர் உண்மையான சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள். இது வெறும் தகவல் பகிர்வு அல்ல; ஒழுக்கப் பொறுப்பின்மை.
இன்றைய இணைய உலகில் உண்மை பேசுவது மட்டும் போதாது; உண்மையைச் சரிபார்த்து பகிர்வதும் ஒழுக்கம்.
தொழில்நுட்பம் மனிதனுக்குச் சேவையாற்றுகிறதா அல்லது மனிதனைப் பயன்படுத்துகிறதா? இந்தக் கேள்வியே நவீன ஒழுக்கத்தின் இதயம்.வளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் தனியுரிமை, தரவு உரிமை, செயற்கை நுண்ணறிவு பொறுப்பு போன்ற கேள்விகள் முக்கியம்.
புதிய சமூக ஒழுக்கம் சொல்வது மிக எளிமையான ஒன்று: திரைக்குப் பின்னாலும் மனிதர் இருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. இது சாதாரண வாக்கியம்போலத் தோன்றினாலும் இணைய நாகரிகத்தின் அடிப்படை.
இன்று பலருக்கு உலகைப் புரிந்துகொள்வதற்கான ஜன்னல் செய்தித்தாளோ, நூலகமோ அல்ல; சமூக ஊடகமே. இணையத்தில் நாம் காட்டும் "நான்' உண்மையானதா அல்லது கட்டமைக்கப்பட்டதா?. இதுவும் ஒழுக்கப் பிரச்னை.
மனிதனால் உருவாக்கப்பட்ட இணையம் மனிதனை மாற்றுகிறது. மனிதன் தன் உருவாக்கத்தை ஒழுக்கத்தால் வழிநடத்த வேண்டும். இல்லையெனில், உருவாக்கம் உருவாக்கியவனை ஆளத் தொடங்கும்.
தொழில்நுட்பமும் மனிதநேயமும் வளர்ந்தால்தான் இணைய உலகம் உண்மையான நாகரிக உலகமாக மாறும்.