ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இந்த மனித அட்டைகள் குவித்த பணத்தின் அளவை யாராலும் அளவிட்டுக் கூற முடியாது. அதை நினைத்தால் தலை சுற்றுகிறது. மயங்கி விழுந்து விடுவோமோ என்ற எண்ணம் வந்து விடுகிறது.

ஒருக்கால் இதன் மதிப்பு அரசு சொத்தின், மொத்த மதிப்பை விட கூடுதலாக கூட இருக்கக் கூடும். ஊழலும் லஞ்சமும் ஒரு பெரும் திருட்டு. பல ஆண்டுகளாக கண்ணுக்கு தெரியாமல், இந்தத் திருட்டு விநாடிக்கு விநாடி நடைபெற்று வருகிறது.

சிறு திருட்டு, கண்டுபிடிக்கப்படுகிறது. பெருந்திருட்டு யாருடைய கவனத்துக்கும் வராமலேயே அரண்மனைகளால் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. இது குற்றம் என்று அனைவருக்கும் தெரிகிறது. இதை பொதுவெளியில், பேசுவற்கு ஆள்கள் இல்லை; மேடை இல்லை; விவாதம் இல்லை.

ஆனால், இந்த ஊழலை மையப்படுத்தித்தான் இன்றைய தேர்தல் அரசியல் சென்று கொண்டிருக்கிறது. ஊழல், லஞ்சம், என்பது பிறர் உழைப்பை திருடுதல் என்பதை, உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு எதிரான கடும் சட்டங்களை உருவாக்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க....