பணியிட மாற்றம் எனும் பரிணாமம்

தனியாகச் சென்று தங்கும் நிலையில், தனிமை தரும் மன உளைச்சலுடன் இருவேறு இடங்களில் குடும்பம் நடத்துவதால் பொருளாதாரச் சுமைகளும் இரட்டிப்பாகின்றன. வீட்டில் அன்றாட பொறுப்புகளையும், அவசரத் தேவைகளையும் மனைவி ஒருவரே சுமக்க வேண்டிய கட்டாயமும் எழுகிறது. பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் வரிசை கட்டி நிற்கும்.

இடமாற்றத்தைப் பணி சார்ந்த அல்லது பொருளாதார ரீதியான மாற்றமாக மட்டுமே பார்க்கிறோம். இதன் பின்னே ஆழமான உளவியல் போராட்டங்களும் உள்ளன. பழகிய தெருக்கள், தெரிந்த கடைகள், பழகிய அலுவலக நண்பர்கள் என நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பதுபோல் ஒர் உணர்வு இருக்கும். அக்கம் பக்கத்தினர் உறவினர் போல நடந்து கொள்வார்கள். திடீரென அந்தச் சங்கிலி உடைபட்டுப் போகும்போது மனதுக்குள் மெல்லிய அச்சம் ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க.....