கடந்த செப்.18-ஆம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷியா மற்றும் ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்கும் நாடுகளுக்கு எதிராக 100 சதவீத வரை இறக்குமதி வரி விதிக்க, 'லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைகள் சட்டம், 2026' என்ற சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
உக்ரைன் போருக்குப் பிறகும் ரஷியாவிடமிருந்து தொடர்ந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி வாங்கும் நாடுகளைப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படுத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.
அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது மிக உயர்ந்த அளவிலான இறக்குமதி வரிகளை விதித்தாலும், ஓரளவு ரூபாய் மதிப்பின் சரிவின் காரணமாக அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவு அதிகரித்துள்ளது.
2025-2026-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி 19 சதவீதமும், சேவை ஏற்றுமதி 10 சதவீதமும் அதிகரித்துள்ளன.
இப்போது சீனா, இந்தியாவின் முக்கிய வர்த்தக கேந்திரமாக மாறி வருகிறது. 2025-2026 நிதியாண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகம் 150 பில்லியன் டாலர்களாக உள்ளது.