பூமியைத் தாக்கும் விண்வெளிக் குப்பைகள்

இது போதாதென்று, இப்போது விண்வெளியிலிருந்து விழும் குப்பைகளும், கழிவுகளும் பூமியைத் தாக்குகின்றன. அத்துடன், விண்ணில் சுற்றும் குப்பைகளால் தந்தையான விண்வெளியும் தனதாற்றலை இழந்து வருகிறது.

அண்மைக்காலமாக, விண்வெளி சார்ந்த ஆய்வுப் பணிகள் அதிகரிப்பு, இந்தத் துறையில் சர்வதேச தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம், தனியார் வர்த்தகச் செயற்கைக்கோள்களின் விரிவாக்கம், விண்வெளிச் சுற்றுலா ஆகியன இந்த விண்வெளிக் குப்பை (ஸ்பேஸ் டெபிரிஸ்) குறித்தான கவலையை விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால், விண்வெளியில் ஏவுகணைகளை ஏவுதல், செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துதல், விண்வெளியில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றன.

விண்வெளிக் குப்பைகளில் கைவிடப்பட்ட ஏவுகணை பாகங்கள், செயலிழந்த செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களின் துண்டுகள் ஆகியவை அடங்கும். செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான சுமார் 36,000 சிதைவுத் துண்டுகளும், கோடிக்கணக்கான சிறிய துண்டுகளும் உள்ளன; இவற்றின் மொத்த எடை 13,486 டன்னை எட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க....