மக்களாட்சியின் மாண்புகள் பேரவையில் ஒலிக்கும்!

கூச்சலும் வெளிநடப்பும் தொடர் ஒத்திவைப்பும் அவையை முடக்கும் ஒவ்வொரு மணித்துளியிலும் அந்த ரத்த வியர்வை எவ்வாறு விரயமாகிறது என்பதை எத்தனை பேர் உணர்ந்து செயல்படுகிறார்கள்?

பதினாறாவது தமிழ்நாடு சட்டப்பேரவை (2021-2026) ஐந்தாண்டுகளில் கூடியது வெறும் 150 நாள்கள் மட்டுமே என்கிறது. 1952-க்குப் பிறகு சட்டப்பேரவை முழுப் பதவிக்காலத்துக்கான மிகக் குறைந்த எண்ணிக்கை இது; சராசரியாக ஆண்டுக்கு 32 நாள்கள் மட்டுமே.

இந்தக் குறுகிய காலத்தில் 194 மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன; ஒன்றைக்கூடக் குழு ஆய்வுக்கு அனுப்பவில்லை. ஆக்கபூர்வமான செயல்பாட்டில் எத்தகைய வீழ்ச்சி? என்பதை இது காட்டுகிறது.

அண்டை மாநிலமான கேரளம் ஆண்டுக்குச் சராசரியாக 50 நாள்கள் பேரவையைக் கூட்டியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, ஆண்டுக்குக் குறைந்தது 100 நாள்களேனும் பேரவை கூடும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது; நிறைவேறியது, அதில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை.

தொகுதியின் கோரிக்கைகள் குறித்து எந்த முன்னாய்வும் செய்யாமல் வந்து மனப்போக்கில் பேசுகிறார்கள். தம் பிரதிநிதி தமக்காகக் குரல் கொடுப்பார் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு இது வெறும் ஏமாற்றமாகிறது; மக்களாட்சியின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்குகிறது.

வரவு-செலவுத் திட்டமும் மானியக் கோரிக்கைகளும் விவாதிக்கப்படும் நேரத்தில்கூட, மக்கள் பிரச்னைகளைப் பேசுவதற்குப் பதிலாக, விசுவாசத் தலைவர்களைப் புகழ்ந்து பாடுவதிலேயே பெரும் நேரம் கரைந்து போகிறது.

தமிழக வரலாற்றில் பேரவைத் தலைவர்களின் வெளிப்படையான கட்சிச் சார்பு பல நேரம் பேரவைக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது; முதல்வர்களின் கண்ணசைவிலேயே அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.இதிலிருந்து மாறுபட்டு, இன்றைய பேரவைத் தலைவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார். இதில் தமிழக முதல்வரின் ஜனநாயக அணுகுமுறை பாராட்டுக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க....